மத்திய பிரதேசத்தின் மருத்துவ கல்வி  அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி.!

Default Image

மத்திய பிரதேசத்தின் மருத்துவ கல்வி  அமைச்சரான விஸ்வாஸ் சாரங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தின் மருத்துவ கல்வி  அமைச்சரான விஸ்வாஸ் சாரங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். முதலில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிற்கு ஜூலை 25-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 11 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் ஆகஸ்ட் 5-ம் தேதி வீடு திரும்பினார்.

அதனையடுத்து அவரது அமைச்சரவை குழுவில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தற்போது மருத்துவ கல்வி அமைச்சராக விஸ்வாஸ் சாரங்கிற்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கான முதல்கட்ட பரிசோதனையில் இவருக்கு நெகட்டிவ் வந்ததை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.

அதனையடுத்து அவரது இரண்டாவது கட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே தனக்கு நெருக்கமாக இருந்த அனைவரையும் கொரோனாவிற்கான பரிசோதனையை செய்து கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
seizure (1)
puducherry school rain holiday
Minister Geethajeevan
Yogi Babu
Southwest Bay of Bengal
M K Stalin