உண்மையை போட்டு உடைத்த பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க்!தவறை ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க்………
பேஸ்புக்கின் தலைமை செயல் நிர்வாகி மார்க் ஜூக்கர்பர்க், இந்திய தேர்தல்களில் பிரிட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனத்தின் தலையீடு இருந்ததாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தவறு நடந்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ள அவர் செயல்பாடுகளில் 3 முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளார்.
விதிமுறைகளை மீறி பேஸ்புக்கின் 5 கோடி பேர் தொடர்பான தகவல்களை தவறாகப் பயன்படுத்தியதாக அனாலிட்டிக்கா நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அந்நிறுவனத்துடனான வர்த்தக உறவை பேஸ்புக் துண்டித்துக் கொண்டுள்ளது. தனிப்பட்ட நபரின் தகவல்கள் களவாடப்பட்டது குறித்து ஆடிட்டிங் செய்ய பேஸ்புக் முடிவு செய்துள்ளது.ஒவ்வொரு நபரின் முதல் பக்கத்தில் என்னென்ன ஆப்ஸ்-களைப் பயன்படுத்த அவர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் டூல்(tool) ஒன்றையும் பேஸ்புக் நிறுவ உள்ளது.இதே போல் தகவல்களைப் பார்வையிடும் குழுவினருக்கும் கட்டுப்பாடுகளை விதிக்க பேஸ்புக் திட்டமிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.