இன்று நீர்மூழ்கி ஃபைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பை தொடங்கி வைக்கிறார்.! பிரதமர் மோடி.!
பிரதமர் மோடி சென்னை-போர்ட்பிளேர் இடையே கடலுக்குள் அமைக்கப்பட்ட ஃபைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பை இன்று தொடங்கி வைக்கிறார். இதற்காக கடந்த 2018 டிசம்பர் மாதம் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
ரூ.1,224 கோடி முதலீட்டில் இந்த தொலைதொடர்பு மற்றும் இணைய சேவை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்படுத்துகிறது. இந்த கேபிள் இணைப்பால் அந்தமான்-நிகோபார் தீவுகளில் மொபைல் போன், லேண்ட் லைனில் விரைவாக சேவை வழங்க முடியும்.
இந்த இணைப்பு மூலம் கல்வி மற்றும் இணைய வர்த்தகம் மேம்படும். மேலும், சுற்றுலா சேவை அதிகரிக்கும், இதனால், வேலைவாய்ப்புகளும் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.