சாக்லேட் பாய் என சொன்னவர் ஒரு Play Boy – உதயநிதி ஸ்டாலின்.!

Default Image

அயனாவரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தாண்டவ முத்து என்பவர் தனது ஆட்டோவின் FC மற்றும் இன்சூரன்ஸ் புதுப்பிக்க கடந்த 5 மாதமாக முயற்சி செய்துள்ளார். ஆனால், பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க முடியாமல் போனது. இதனால், ஓட்டுநர் முத்து ஆட்டோவிற்கு  தீ வைத்து கொளுத்தினார்.

இந்த சம்பவம் அறிந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆட்டோ ஓட்டுநர் முத்துவிற்கு புதிய ஆட்டோ வழங்க நிதிஉதவி செய்துள்ளார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நடைபெறும் இந்த ஆட்சி கமிஷன் மற்றும் கரப்சன் ஆட்சி எனவும் இ -பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என கூறினார்.

அப்போது, அமைச்சர் ஜெயக்குமார் சாக்லேட் பாய் என கூறியது குறித்த செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், சாக்லேட் பாய் என்பது தவறான வார்த்தை இல்லை, சொன்னவர் ஒரு Play Boy என பதிலளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்