பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபலம்.!
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் குழந்தை நட்சத்திரமான சாரா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, அதிதிராவ் ஹைத்ரி, அஸ்வின், ஜெயராம், சரத்குமார், கிஷோர், ரியாஸ்கான், லால், மோகன் ராமன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிப்பது குறிப்பிடத்தக்கது . ஊரடங்கிற்கு முன்பு இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து மற்றும் புதுவையில் நடைபெற்றது.
தற்போது இந்த படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் வரும் செப்டம்பர் மாதத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வைத்து படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தில் பிரபல குழந்தை நட்சத்திரமாக வலம் வரும் சாரா இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏ. எல். விஜய்யின் ‘தெய்வத் திருமகள்’ என்ற படத்தில் தனது நடிப்பினால் அனைவரையும் கட்டி போட்டவர் சாரா. அதனையடுத்து சைவம், விழித்திரு, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் சாரா இணைந்துள்ளதாகவும், விரைவில் அதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.