#BREAKING: மூணாறு நிலச்சரிவு..உயிரிழப்பு எண்ணிக்கை 42 ஆக உயர்வு.!
கேரளாவின் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மூன்று நாட்களக்கு முன்பு தொடந்து கனமழை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் சிலர் தமிழர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலச்சரிவிலிருந்து இன்று 16 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட பின்னர் ராஜமலா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக இருந்த நிலையில் 42 ஆக உயர்ந்துள்ளது என்று இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனமிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிலச்சரிவில் மாயமான 40க்கும் மேற்பட்டோரை தேடும் பணி 3வது நாளாக தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி புதைந்து கிடந்த சிலர் உடலின் புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ளது.