தல அஜித்தின் பிளாக் பஸ்டர் திரைப்படத்தின் ரீமேக்கில் மெகா ஸ்டார்.?

அஜித் நடிப்பில் வெற்றியடைந்த வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ளார் என தகவல்கள் கசிந்து வருகிறது.
தல அஜித் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேதாளம். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். அஜித்திற்கான மாஸ் காட்சிகள், செண்டிமெண்ட், ஆலுமா டோலுமா பாடல் என தல அஜித் ரசிகர்கள் கொண்டாடும் அனைத்தும் அமைந்ததால் படம் பிளாக் பஸ்டராக மாறியது.
இந்த படம் தற்போது தெலுங்கில் தயாராக உள்ளதாம். முதலில் வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பதாக கூறப்பட்டது. இவர் தான் வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தற்போது வெளியாகிவரும் தகவலின் படி வேதாளம் ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இதன் உறுதியான விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!
April 11, 2025
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025