வெஸ்ட் இண்டீஸ் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது!
வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக் கோப்பை தகுதி சுற்றுகான போட்டியில் ஸ்காட்லாந்து அணிவுடன் நடந்த போட்டியில் திரில் வெற்றி பெற்றுள்ளது.
ஜிம்பாப்வேயில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் முடிவில் 6 அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றை எட்டியுள்ளன. இந்த நிலையில் சூப்பர் சிக்ஸ் சுற்றின் இன்றைய ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்து அணியை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, கத்துக்குட்டி அணியான ஸ்காட்லாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
தொடக்க ஆட்டகாரர் கெயில் தான் சந்தித்த முதல் பந்திலேயே நடையை கட்ட மற்றொரு தொடக்க வீரர் லிவிஸ் 66 ரன்கள் சேர்த்தார். அனுபவ வீரர் சாமுவேல்ஸ் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த நிலையில் அந்த அணி 48.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ஸ்காட்லாந்து அணி 35.2 ஒவரில் 5 விக்கெட் இழந்து 125 ரன்கள் சேர்த்து இருந்த போது மழை குறிக்கிட்டது. இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி “டக்வர்த் லூயிஸ்” முறையில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டது. இதனையடுத்து அடுத்தாண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதிப் பெற்றுள்ளது.ஒரு வழியாக உலக் கோப்பைக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிப் பெற்றதால், அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.