#Tasmag: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை.!
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.189 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முழு ஊரடங்கை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. அதனால் நேற்று டாஸ்மாக் கடைகளில் அதிகமாக குவிய தொடங்கின இதன் காரணமாக நேற்று அதிகமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று மட்டும் ரூ.189.38 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் அதிகபட்சமாக மதுரையில் ரூ.44.55 கோடியும், திருச்சி மாவட்டத்தில் ரூ.41.67 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.