43 மருத்துவர்கள் உயிரிழப்பு என்பதில் உண்மையில்லை.! அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்பு.!
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 43 மருத்துவர்கள் இறந்ததாக ஒரு தகவல் வெளியானது. அந்த தகவலை இன்று செய்தியாளர் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ 43 மருத்துவர்கள் கொரோனாவால் இறந்ததாக கூறப்படும் தகவலை ஐஎம்ஏ (IMA-Indian Medical Association) மாநில தலைவரே மறுப்பு தெரிவித்துள்ளார். ஆதலால், சமூக வலைத்தளங்களில் ஆதாரமற்ற தகவல்களை பரப்ப வேண்டாம். கொரோனா தடுப்பு பணிகளில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.’ என அவர் தெரிவித்தார்.
மேலும், ‘ கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 18 சதவீதம் பேர் மட்டுமே தற்போது மருத்துவமனை சிகிச்சைகளில் உள்ளனர். மீதம் உள்ளவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 80 முதல் 90 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சென்னையில், கொரோனா தொற்றானது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.’ என அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.