101 ராணுவத் தளவாடக் கருவிகளை இறக்குமதி செய்யத் தடை! ராஜ்நாத் சிங்.!

Default Image

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்பு துறையில்  செயல்படுத்தும் வகையில் 101 ராணுவத் தளவாடக் கருவிகளை இறக்குமதி செய்யத் தடை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இறக்குமதிகள் மீதான தடை 2020 முதல் 2024 வரை படிப்படியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆயுதப்படைகளின் எதிர்பார்க்கப்பட்ட தேவைகள் குறித்து இந்திய பாதுகாப்புத் துறையினருக்கு அறிவிப்பதே எங்கள் நோக்கம், இதனால், அவர்கள் உள்நாட்டு தயாரிப்பை இலக்கை அடைய சிறந்த முறையில் தயாராக உள்ளனர் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்பு துறையில் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும், இந்த திட்டத்தின் மூலம் துப்பாக்கிகள், சரக்கு போக்குவரத்துக்கான விமானங்கள், ரேடார்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கபடும், அடுத்த 7 ஆண்டுகளுக்குள் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் உள்நாட்டு நிறுவனங்களுடன் போடப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட 101 பொருட்களின் பட்டியலில் எளிய பாகங்கள் மட்டுமல்லாமல் பீரங்கி துப்பாக்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள், கொர்வெட்டுகள், சோனார் அமைப்புகள், போக்குவரத்து விமானம்,  ரேடார்கள் மற்றும் பல பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளன என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்