முறை தவறிய உறவு!காவல் நிலையத்திலேயே உதவி காவல் ஆய்வாளர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு!
காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சென்னையில் அயனாவரம் காவல் நிலையத்திலேயே கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த், அதே பகுதியைச் சேர்ந்த முனாஃப் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்தார். இதுதொடர்பாக இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தமது மனைவியுடன் ஆனந்த் தவறான உறவு வைத்திருப்பதாக குற்றம்சாட்டிய முனாஃப், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தை குத்த முயன்றார்.
இதை தடுக்க முயன்ற போது, உதவி ஆய்வாளர் சுப்பிரமணிக்கு கையில் வெட்டு விழுந்தது. இதையடுத்து முனாஃபை கைது செய்த போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர். மேலும் காயம் அடைந்த உதவி ஆய்வாளர் சுப்பிரமணிக்கு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.