கொரோனா முன்கள பணியாளர்களுக்கான இழப்பீடு தொகை குறைப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் தினகரன்!

Default Image
கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு குறைத்ததால் தினகரன் கண்டித்து பதிவிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவி வரக் கூடிய சூழ்நிலையில் மக்கள் அனைவரும் வெளியில் செல்ல வேண்டாம் என கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் உயிர் காக்கும் முன் களப்பணியாளர்கள் ஆகிய மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர்  கொரோனா தொற்றால் உயிர் இழக்கும் பொழுது அவர்களது குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் ஆரம்பத்தில் அறிவித்திருந்தார்.
அதை ஒரு கோடியாக அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தி இருந்தார். இதனை எடுத்து 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையாக மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த 50 லட்சத்தை பாதியாக குறைத்து முன் களப் பணியாளர்களுக்கு 25 லட்சம் இழப்பீடு கொடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிவித்தது.
இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு தங்களது இன்னுயிரை இழக்கும் முன் களப் பணியாளர்களுக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த நிதி பாதியாகக் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிட்டு இருப்பது கண்டனத்திற்குரியது என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்