Covid :19 குணமாகியவர்கள் எண்ணிக்கை 1.25 ஆக அதிகரிப்பு – மொத்த பாதிப்பு எவ்வளவு தெரியுமா?
உலகம் முழுவதிலும் 1.95 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், குணமாகியவர்கள் எண்ணிக்கை 1.25 ஆக அதிகரிப்பு.
இதுவரை உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,95,43,562 ஆகும். இவர்களில் 7,24,075 பேர் உயிரிழந்துள்ளனர். 1,25,45,567 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் குணமாகி உள்ளனர் என்பதே நற்செய்தி.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 2,83,009 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் 6,448 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 62,71,494 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.