உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யா களமிறக்கவுள்ளது.! – அந்நாட்டு சுகாதாரத்தை அமைச்சர் தகவல்.!

ஆகஸ்ட் 12ஆம் தேதி உலகிற்கு முதல் கொரோனா தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்த உள்ளது. அக்டோபர் மாதம் இதன் உற்பத்தி தொடங்கும். – ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் முரஸ்கோ தகவல்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு தடுப்பு மருந்து கண்டறியும் வேலைகள் பல்வேறு நாடுகளில் பல கட்டங்களாக விரிவடைந்து வருகிறது. இதில் யார் முதலில் உலகிற்கு கொரோனா தடுப்பூசியை களமிறக்க உள்ளார்கள் என உலகமே எதிர்நோக்கி வருகிறது.
இந்நிலையில் ரஷ்யா நாட்டை சேர்ந்த காமலேயா நிறுவனம் கொரோனா தடுப்பூசியை கண்டறிந்து அதனை உலகிற்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இந்த தடுப்பு மருந்தை மனித சோதனைக்காக உட்படுத்தி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் முரஸ்கோ கூறுகையில், ‘ ஆகஸ்ட் 12ஆம் தேதி உலகிற்கு முதல் கொரோனா தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்த உள்ளது. அக்டோபர் மாதம் இதன் உற்பத்தி தொடங்கும். தடுப்பூசி தயாரிப்பதற்கான செலவு நாட்டு பட்ஜெட்டில் சேர்க்கப்படும். தடுப்பு மருந்து பாதுக்காப்பாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்’ என அவர் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025