வகுப்புவாத சண்டையில் இருந்து விலகி இருங்கள்! பாகிஸ்தானுக்கு இந்தியா வேண்டுகோள்!
வகுப்புவாத சண்டையில் இருந்து விலகி இருங்கள்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், இந்த பரபரப்புக்கு மத்தியிலும், உத்தர பிரதேச மாநில அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளி செங்கல் வைத்து அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் ராமர் கோயில் கட்டுவது குறித்து பாகிஸ்தான் சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்திருந்தது. பாகிஸ்தானின் கருத்தை இந்தியா நிராகரித்தது. மேலும், பாகிஸ்தானிடம், வகுப்புவாத தூண்டுதலிலிருந்து விலகியிருக்குமாறு கேட்டுக் கொண்டது.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா இதுகுறித்து கூறுகையில், இந்தியாவின் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் செய்தி அறிக்கையை இந்தியாவுக்கு உட்பட்ட ஒரு விசயத்தில் நாங்கள் கண்டிருக்கிறோம். பாகிஸ்தான் இந்தியாவின் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.