புதிய தடை நீக்கம் வைத்த ஆஸ்திரேலிய கேட்பன் ஸ்மித்!ராபாடா தடை நீக்கம் ….

Default Image

ஆஸ்திரேலிய கேட்பன் ஸ்மித்துக்குப் காகிசோ ரபாடா தன் மேல் முறையீட்டில் வெற்றி பெற்று தடை நீக்கம் பெற்றது  பிடிக்கவில்லை. இனி பேட்ஸ்மெனை அனுமதிக்கக் கூடிய அளவுக்கு இடிக்கலாம் என்பது போல் மேல்முறையீட்டு முடிவு உள்ளது என்று சாடினார்.

6 மணி நேர மாராத்தான் விசாரணையில் ஸ்மித் மீது ரபாடா இடித்தது லேசானதுதான் ஐசிசி வர்ணித்த அளவுக்கு அது மோசமாக இல்லை மேலும் வேண்டுமென்றெல்லாம் இடிக்கவில்லை என்று கூறி அவரது அபராதம், தகுதியிழப்புப் புள்ளியை குறைத்து தடையை நீக்கி உத்தரவிட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட ஸ்மித், ரபாடா தடை நீக்கம் பற்றி கூறும்போது,

“ஆகவே ஐசிசி ஒரு தரநிலையை அமைத்துக் கொடுத்துள்ளது இல்லையா? தெளிவாக அவர் என் மீது மோதினார். என் பவுலர்களிடம் எதிரணி வீரர்கள் மீது மோது என்று நான் ஒருபோதும் கூற மாட்டேன். இது ஆட்டத்தின் ஒரு அங்கமல்ல.

உண்மையில் கூறப்போனால் வீடியோ பதிவில் தெரிந்ததை விட அவர் என் மீது கொஞ்சம் கடுமையாகவே மோதினார். அது என்னைப் பெரிதாக பாதிக்கவில்லை. அதிகமாக கொண்டாடுவது ஏன் என்றுதான் நான் கேட்கிறேன். பேட்ஸ்மென் முகத்தருகே ஏன் வர வேண்டும்? ஏற்கெனவேதான் போட்டியில் பவுலர் வென்று விட்டாரே. ஆனால் அவர்கள் எது வேண்டுமென்றே இடிப்பது அல்லது அல்ல என்பதை அவர்கள் ஏற்கெனவே முடிவு செய்து விட்டார்கள். ஆனால் விஷயம் அதுவேயல்ல.

அணியின் சிறந்த வீரர் தடையினால் ஆட முடியாமல் போய்விடக்கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். எனவே இது நாளையும் ஒரு சாத்தியமாக மாறியுள்ளது. ஆம் இனி மோதிவிட்டு அப்பீல் செய்தால் தப்பித்து விடலாம் என்ற தவறான முன்னுதாரணம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. வீரர்கள் இனி அப்பீல் செய்வார்கள், அதுதானே இதற்கு அர்த்தம்.

இந்த உடல் இடிப்பில் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர் (நான்) விசாரணைக்கு அழைக்கப்படவே இல்லை, அவர் தரப்பு என்னவென்று கேட்கப்படவே இல்லை என்பது சுவாரசியமாக உள்ளது. ஆனாலும் சிறந்த வீரர்களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் ரபாடா தற்போது உலகின் நம்பர் 1. அவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுகிறது, தண்டிக்கப்படுகிறார், ஆனால் அப்பீல் செய்து குற்றச்சாட்டுக் குறைக்கப்படுகிறது.

குரோவ் நிலையில் நான் இருந்திருந்தால் நிச்சயம் நான் எரிச்சலடைந்திருப்பேன். கடந்த போட்டியில் நாங்கள் நல்ல ஆட்ட உணர்வுடன் தான் ஆடினோம். எங்களது கடினமான, ஆவேசமான கிரிக்கெட்டை தொடர்ந்து ஆடுவோம். ஆனால் ஆட்டத்தின் அளவுகோலுக்குள் நடப்போம். தொடரில் 2-1 என்று முன்னிலை பெறுவோம்” என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்