வயநாடு,மலப்புரத்திற்கு ரெட் அலர்ட்..! பலியானோர் எண்ணிக்கை 36ஆக அதிகரிப்பு..!

Default Image

மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பருவகால மழை தொடர்ந்து பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் உருவாகியுள்ளது. மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகியவற்றுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கேரளாவில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசியதால் 2,000 க்கும் மேற்பட்டோர் தங்குமிடம் மற்றும் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளத்தில் சிக்கி மேலும் ஐந்து இறந்ததால், மொத்த எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. 

சாலியார் நதி நிரம்பி வழிகின்றதையடுத்து, நீரில் மூழ்கிய பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டதையடுத்து மலப்புரத்தில் உள்ள  நிலம்பூர் வெள்ளத்தில் மூழ்கியது.மேலும், எர்ணாகுளத்தில் உள்ள நேரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு காட்டு யானை ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.

திரிசூரில், பலத்த காற்று மற்றும் பலத்த மழை காரணமாக மாவட்டங்களில் மரங்கள் அடியோடு சாய்ந்தது, இதனால் மின்சாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்