சுஷ்மா சுவராஜ் நினைவு தினம்.. தன்னலமின்றி இந்தியாவுக்கு சேவை செய்தவர்-பிரதமர் மோடி.!
சுஷ்மா சுவராஜ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதிஉயிரிழந்தார். இவர் 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 3 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த இவர் சிறுநீரக பாதிப்பால் உயிரிழந்தார்.
இந்நிலையில், இன்று இவரின் முதலாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. சுஷ்மா ஸ்வராஜின் முதலமாண்டு நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி பதிவு ஒன்றை பத்திவிட்டுள்ளார்.
Remembering Sushma Ji on her first Punya Tithi. Her untimely and unfortunate demise left many saddened. She served India selflessly and was an articulate voice for India at the world stage.
Here is what I had spoken at a prayer meet in her memory. https://t.co/nHIXCw469P
— Narendra Modi (@narendramodi) August 6, 2020
அதில், சுஷ்மா ஸ்வராஜின் முதலமாண்டு நினைவு தினத்தை நினைவு கூறுகிறேன். அவரது துரதிர்ஷ்டவசமான மறைவு பலரை சோகத்தில் ஆழ்த்தியது. அவர் தன்னலமின்றி இந்தியாவுக்கு சேவை செய்தார் என மோடி பதிவிட்டுள்ளார்.