பதிவு செய்தவுடன் இ – பாஸ் வழங்க வேண்டும் என்று சட்டம் ஒன்றும் இல்லை – அமைச்சர் வீரமணி!

Default Image

பதிவு செய்த உடனே இ பாஸ் வழங்க வேண்டும் என்பதற்கான சட்டம் எதுவும் இல்லை என அமைச்சர் வீரமணி அவர்கள் கூறியுள்ளார்.

வேலூரில் 13 அங்கன்வாடி சாவிகளை பணியாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே சி வீரமணி அவர்களும் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறையில் வருவாய் குறைந்துள்ளது என கூறியுள்ளார்.

மேலும் பணம் பெற்றுக் கொண்டு இ பாஸ்  வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளோம் எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பதிவு செய்தவுடன் இ பாஸ் வழங்க வேண்டும் என சட்டம் எதுவும் இல்லை, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் ஆய்வு செய்த பின்னரே அனுமதி வழங்குகின்றனர். உடனே கிடைக்காததற்கு காரணம் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தான் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்