வங்கிகளில் அடகு வைக்கும் தங்கத்தின் மதிப்பில் 90 %பணம் கடனாக வழங்கப்படும் -ரிசர்வ் வங்கி ஆளுநர்

வங்கிகளில் அடகு வைக்கும் தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் பணம் கடனாக வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.

பணவியல் கொள்கைக் கூட்டத்திற்குப் பிறகு சக்தி காந்ததாஸ் காணொளி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு, முக்கிய கடன் விகிதங்களான ரெப்போ வீதம் மற்றும்  ரிவர்ஸ் ரெப்போ ரெப்போ வீதம் மாறாமல் உள்ளது என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்தார்.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தங்கக் கடன்களுக்கான கடன்-மதிப்பு விகிதத்தை 75 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக உயர்த்தினார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி சுருக்க மண்டலத்தில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 2020-21 ஆம் ஆண்டில், உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியும் எதிர்மறையாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

வீட்டுத் துறை மற்றும் சிறிய வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரூ .10,000 கோடி கூடுதல் சிறப்பு பணப்புழக்க வசதியை அறிவித்தார்.  கொரோனாவால் ஏற்படும் பொருளாதார சிக்கல்களை சமாளிக்க, ரிசர்வ் வங்கி கடன் வழங்குநர்களுக்கு உரிமையை மாற்றாமல் கார்ப்பரேட் கடன்களுக்கான தீர்மானத் திட்டத்தை செயல்படுத்த அனுமதித்தது.

ற்போதைய நெருக்கடி சூழலை கருத்தில் கொண்டு வங்கிகளில் தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் அளவிற்கு கடன் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த தளர்வு மார்ச் 31, 2021 வரை கிடைக்கும்  என்று சக்தி காந்த தாஸ் கூறினர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.