எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம் – முதல்வர் பழனிசாமி
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை வடபழஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நல மையத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.மேலும் மதுரையில் கொரோனா நோய்த் தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி பங்கேற்றார்.
இதன் பின்னர் அவர் பேசுகையில், மதுரையில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய வீடு வீடாக சோதனை செய்யப்படுகிறது பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதி உள்ளது.அரசின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளது . மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.