மைதானத்திற்கு செல்ல எதிர்பார்புடன் காத்திருக்கும் ரெய்னா..!
சுரேஷ் ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் அவர் மைதானத்திற்கு செல்ல காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்ததை தொடர்ந்து மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டியை தாற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், பிசிசிஐ இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டியை நடத்த முடிவு செய்தது.
அதன்படி போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இந்தாண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.
இந்த நிலையில் இந்த ஐபிஎல் போட்டிக்காக அணைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்களது வீட்டிலே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள், அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணைக்கேப்டன் சுரேஷ் ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் அவர் மைதானத்திற்கு செல்ல காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.