விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சகோதரி மறைவு! முதல்வர் பழனிசாமி இரங்கல்!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சகோதரி மறைவு.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் அனைவரையுமே இந்த வைரஸ் தாக்குகிறது.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களின் சகோதரி பானுமதி, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமடைந்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025