பலூன் போல் பெரிதாகும் வயிறு.. சீன பெண்மணி அவதி..!
சீனாவில் ஹுவாங் என்ற பெண்ணிற்கு வயிறு பலூன் பெரிதாகும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் வசித்து வந்தவர் ஹுவாங் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன மேலும் இவரது வயிறு தற்போது வரை பெரிதாக வளர்ந்து கொண்டே வருகிறது அவரது எடை 121 பவுன் தாக இருக்கிறது மேலும் அதில் அவர் வயிறு மட்டும் 44 பவுண்ட் எடை கொண்டதாக இருக்கிறது இவருக்கு கடந்த 2 வருடங்களாகவே இந்த பிரச்சனை இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து மருத்துவர்களிடன் ஹுவாங் கேட்டதற்கு மருத்துவர்கள் சில மருந்துகளை கொடுத்துள்ளனர் , அனால் மருந்துகளை சாப்பிட்டவுடன் வயிறு வலி குறைந்த போதிலும் அவரது வயிறு பெரிதாக கொண்டு சென்றுள்ளது, இந்த நிலையில் அவரது உடல்நிலை ஆராய்ச்சி செய்த மருத்துவர்கள் அவருக்கு கல்லீரல் நோய் கருப்பை புற்றுநோய், உடலில் கட்டி உருவாகுதல் அடி வயிறு மற்றும் மார்பு ஆகியவற்றில் தேவையற்ற திரவம் உருவாக்குதல் உள்ளிட்ட இருப்பதாக கூறுகின்றனர்.
மேலும் இதுகுறித்து ஹுவாங் கூறும்போது எனது வயிறு இப்படி பெரிதாகக் இருப்பது எனக்கு கவலையாக இருக்கிறது இதனால் என்னால் நிம்மதியாக தூங்க கூட முடியவில்லை ,மேலும் எனது இரண்டு குழந்தைகளை என்னால் கவனிக்க முடியவில்லை நான் எதற்காக வெளியே சென்றாலும் அங்குள்ள பொதுமக்கள் கர்ப்பிணியாக பார்க்கிறார்கள் சீக்கிரம் இந்த நோயில் இருந்து வெளிவந்து விடுவேன் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.