சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை – இன்று மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கைக்கு தடை கோரிய வழக்கில் இன்று மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் தற்போது, “சூழலியல் தாக்க மதிப்பீடு 2006” நடைமுறையில் உள்ளது.இதற்கிடையில் புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய அரசு “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” என்ற பெயரில் வெளியிட்டது.அந்த வரையறையின் படி “சூழலியல் தாக்க மதிப்பீடு 2020” அனுமதி வழங்கப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதுகாப்பும் இருக்காது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இது குறித்து பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் சுற்றுசூழல் வரைவு அறிக்கைக்கு தடை கோரி மீனவர் நல சங்கம் சார்பில் செல்வராஜ் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.அவரது வழக்கில், பிராந்திய மொழிகள் சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை வெளியிடும் வரை தடை வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுற்றுசூழல் வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.மேலும் இது தெடர்பாக இன்றைக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கினை இன்று ஒத்திவைத்துள்ளது.