கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தைத் தாண்டியது.!
கர்நாடகாவில் மொத்த கொரோனாபாதிப்பு எண்ணிக்கை 1.5 லட்சத்தைத் தாண்டியது.
கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. நேற்று ஓரே நாளில் 5619 பேருக்கு கொரோனா இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 1,51,449 ஆக உள்ளன.
இந்நிலையில் 74,000 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளன. அங்கு மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நான்கு மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்றாகும். ஒரே நாளில் 100 பேர் உய்ரழிந்துள்ளனர். இதுவரை மொத்தம் 2804 இறப்புகள் உள்ளன.
அம்மாநில முதலமைச்சர் யெடியுரப்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும், அரசாங்கத்தின் கவனம் பெங்களூரில் உள்ளது.