தொழில் அதிபர் உறவுக்கு வற்புறுத்தியதால் ஓட்டலின் 6-வது மாடியில் இருந்து  குதித்த மாடல் அழகி!

Default Image

ஓட்டலின் 6-வது மாடியில் இருந்து ரஷ்ய மாடல் அழகி ஒருவர் பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க  குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் வளர்ந்துவரும் பிரபல மாடல் அழகி எக்டேரினா ஸ்டெட்யுக் (வயது 22) ஒப்பந்த நிகழ்ச்சி தொடர்பாக ஐக்கிய அமீரகத்தின் துபாய்க்கு சென்றுள்ளார்.இந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் மாடல் அழகி தங்கியிருந்த ஓட்டல் அறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

Image result for Ekaterina Stetsyuk

பின்னர் அந்த அழகியை உறவுக்கு வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அழகியை அவர் கத்தி காட்டி மிரட்டியுள்ளதுடன், ஆசைக்கு இணங்கும்படி நிர்பந்தித்துள்ளார். இந்த நிலையில் அந்த நபரிடம் இருந்து தப்பித்துக் கொள்ள மாடல் அழகி தான் தங்கியிருந்த ஒட்டல் அறையில் இருந்து கீழே குதித்துள்ளார்.

ஓட்டலின் 6-வது மாடியில் இருந்து குதித்ததால் அவருக்கு முதுகெலும்பு உடைந்ததுடன் விலா எலும்புகள் சிலவும் உடைந்துள்ளது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்

விசாரணையில் ரஷ்ய மாடல் அழகி பாலிய தொழிலாளி எனவும், தன்னை தாக்கியதால் தாம் உயிர் காத்துக் கொள்ள கத்தியை காட்டி மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழில் அதிபர் அளித்த தகவலின் அடிப்படையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் மாடல் அழகியை போலீசார் கைது செய்துள்ளனர்.ஆனால் இது பொய் குற்றச்சாட்டு எனவும், தமது மகள் ரஷ்யாவில் வளர்ந்து வரும் மாடல் அழகி எனவும், பொய் குற்றச்சாட்டால் தமது மகளை சிறையில் தள்ள துபாய் அரசு முயற்சிப்பதாகவும் அவரின் தாயார் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் உண்மை நிரூபணமானால் பாலியல் பலாத்காரத்திற்கு முயற்சித்த குற்றத்திற்காகவும் கொலை முயற்சிக்காகவும் அந்த அமெரிக்கருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்