கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கேரளா பெண்.! ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியமர்த்தம்.!

Default Image

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கேரளா பெண்ணிற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநராக தனது புது பணியை தொடங்கியுள்ளார்.

கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள ஊரடங்கால் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. அந்த வகையில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கேரளா பெண் ஒருவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக மாறியுள்ளார். ஆம் கோழிக்கோட்டில் உள்ள புலியாவு தேசிய கலைஞர் மற்றும் அறிவியல் கல்லூரியில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிபவர் தீபா ஜோசப். விலங்காடு பகுதியை சேர்ந்த இவர் கனரக வாகனங்களை ஒட்டும் பயிற்சியையும் பெற்றதோடு, பெரிந்தல்மன்னா ஆர்டிஓ அலுவலகத்தில் அதற்கான உரிமத்தையும் பெற்றார்.

கராத்தேவில் பிளேக் பெல்ட்டான தீபாவின் கணவரான அனில்குமார் ஒர்க்ஷாப்பில் பணிபுரிந்து வருபவர். தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இவரது வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. கல்லூரி திறக்கப்படாத காரணத்தால் வேலையிழந்து தவிக்கும் தீபாவிற்கு நண்பர் ஒருவர் மூலம் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கான பணி ஒன்று உள்ளது என்பதை அறிந்துள்ளார்.

அதனையடுத்து அவரது தகுதியை அறிந்து ஓட்டுநருக்கான வேலையை வழங்கியுள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதல் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக தனது பணியை தீபா தொடங்கியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்