புதுச்சேரி அமைச்சர் மற்றும் மகனுக்கும் கொரோனா உறுதி.!
புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சருக்கு கொரோனா.
புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து அமைச்சர் கந்தசாமியின் குடும்பத்தினர் அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்தனர். அவர்கள் கோரிமேட்டில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நேற்று பரிசோதனை மேற்கொண்டனர்.
சோதனை முடிவில் அமைச்சர் கந்தசாமிக்கும் அவரது மகனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது . இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகினற்னர்.