குஜராத் மருத்துவமனையில் தீ விபத்து.. 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஷீரா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மருத்துவமனையில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
தீ அடுத்தடுத்த அறைகளுக்கு வேகமாக பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மற்ற நோயாளிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், நிலைமை குறித்து முதல்வர் விஜய் ரூபானி மற்றும் மேயரிடம் பிரதமர் கேட்டறிந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?
April 8, 2025