பேட்டி கொடுக்கும் பொழுது ஹிரோஷிமாவை நினைத்து கலங்கிய பெய்ரூட் ஆளுநர்!
பெய்ரூட் ஆளுநர் தனது நாட்டைக் குறித்து பேசுகையில், ஹிரோஷிமாவை நினைத்து கலங்கிய நிகழ்வு பலரது நெஞ்சை உலுக்கியுள்ளது.
பெய்ரூட்டின் துறைமுகத்தில் நேற்று மிகப்பெரிய சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில், அந்நகரமே மிகப்பெரிய தேர்வை கண்டுள்ளது. இந்த நிகழ்வில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3,700 பேர் மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடோனிலிருந்து 2700 டன் அமோனியம் நைட்ரேட் தான் காரணம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய பெய்ரூட் ஆளுநர், ஹிரோஷிமா நாகசாகி நிகழ்வுடன் ஒப்பிட்டு பேசிய போது கண்கலங்கி நின்றது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்துள்ளது. இது போன்ற நிகழ்வை என் வாழ்வில் சந்தித்தது இல்லை என கூறியுள்ளார்.