அதிமுக மக்களவையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு!
தெலுங்குதேசக் கட்சி எம்.பி. மக்களவையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அதிமுக செயல்படுவதாக குற்றசாட்டியுள்ளார்.
மக்களவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து உறுதியளிக்க வலியுறுத்தி அதிமுக தொடர் அமளியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் மக்களவை முடங்குவதால் மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவிடாமல் அதிமுக தடுப்பதாக தெலுங்குதேசக் கட்சி எம்பி ஜெயதேவ் கள்ளா (jayadev galla) குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசு விவாதத்தில் இருந்து தப்பி ஓடுவதாகவும், அதற்கு சபாநாயகரும் ஆதரவு அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது மேட்ச் ஃபிக்சிங் போல இருப்பதாக விமர்சித்துள்ள அவர், பா.ஜ.வின் தாளத்துக்கு அதிமுக ஆடுவதாகவும் கூறியுள்ளார்.