தனியார் மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அரசு அனுமதியளிக்க கோரிக்கை!

தனியார் மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிற நிலையில், கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த, இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் சி.என்.ராஜா, தனியார் மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கொரோனா பாதிப்பால் 42 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் தவறானது என்றும், எந்த ஒரு தனியார் மருத்துவமனைகளும் அதிக கட்டணம் வசூலித்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
கடலூரில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி விஜய் என்கவுண்டர்.!
April 2, 2025
‘பாவம், கொல்லாதீங்க.. 2 மடங்கு பணம் தாரேன் விட்டுடுங்க’.! ஆனந்த் அம்பானியின் அந்த மனசு..!
April 2, 2025