#BREAKING : ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை கிளம்பினார் .

இதையடுத்து  லக்னோ விமான நிலையம்  சென்றடைந்த மோடி  அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி வந்தடைந்தார்.அயோத்தி வந்த பிரதமர் மோடியை உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் சமூக இடைவெளியுடன் வரவேற்றனர். இதன் பின் அயோத்தி ராமஜென்ம பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.இந்நிலையில் ராமஜென்ம பூஜையில்  40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.