லெபனான் விபத்து.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது.!
நேற்று லெபனானில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் இன்று காலை வரை 70 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது, 100 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் 4,000- க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விபத்து இதனால் நடந்தது என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.