முதன்முறையாக தமிழகத்தில் 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி!

தமிழகத்தில் 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி முதன்முறையாக நடைபெறுகிறது.

தமிழகத்தில் இந்த வருடம் குறுவை சாகுபடிக்காக 3.870 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என வேளாண் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டு கால வரலாற்றில் இதுவே குறுவை சாகுபடி பரப்பு அதிகமாக உள்ளது முதன்முறையாகும், 270 வருவாய் கிராமங்கள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது எனவும் வேளாண் துறை திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

மேலும் வேளாண் துறை வெளியிட்டுள்ள செய்தியில் தமிழகத்தில் இந்த ஆண்டு திருந்திய நெல் சாகுபடி முறைகள், நேரடி நெல் விதைப்பு ஆகிய தொழில்நுட்பங்களும் சமுதாய நாற்றங்கால் முறையில் நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு ஏற்ற காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், டெல்டா மாவட்டங்களில் இதுவரையில் அரசின் நடவடிக்கையால் 3.870 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.

author avatar
Rebekal