தற்காலிகமாக H1 B விசா பிரீமியம் நடைமுறை நிறுத்தம்!
தற்காலிகமாக எச்1-பி விசாக்களை விரைவாக வழங்கும் பிரீமியம் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் செப்டம்பர் 10ம் தேதி வரை இந்த தடை நீடிக்கும் என கூறப்படுகிறது. வழக்கமான எச்1 பி விசாக்கள் வழங்குவதில் அதிக தாமதம் ஏற்படுவதால் பிரிமியம் விசா விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்க குடியேற்றத்துறை திட்டமிட்டுள்ளது.
இதே நேரத்தில் 2019 நிதியாண்டுக்கான பிரீமியம் அல்லாத எச் 1பி விசாக்களுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 2ம் தேதி முதல் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.