கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே ஒரே நாளில் 4 கோவில்களில் திருட்டு….!
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே ஒரே நாளில் 4 கோவில்களில் மர்ம நபர்கள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலமங்கலத்திலிருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலையில்,ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் நேற்று சில மர்ம நபர்கள் கோவிலின் சுவற்றின் மீது ஏறி அங்குள்ள அம்மன் சிலையின் கழுத்திலிருந்த இரண்டரை பவுன் தாலி செயின், மற்றும் உண்டியல் பணம் , கம்மல், மற்றும் அம்மனுக்கு அலங்கரிக்க வைத்திருக்கும் புடவைகள் அனைத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இந்நிலையில் அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலதில் உள்ள விநாயகர் கோவில் உண்டியல் மற்றும் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள, சித்தலிங்கேஸ்வர சுவாமி கோவிலின் உண்டிலை உடைத்து, மர்ம நபர்கள் காணிக்கை பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
அதே பகுதியில் உள்ள ஐயப்பன் கோவில் உண்டியல் காணிக்கையையும் திருடி சென்றுள்ளனர். மேலும் இந்த நான்கு கோவில்களில் திருட்டு சம்பவம் நடந்ததால், அப்பகுதிலுள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கெலமங்கலம் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன், 52 சிசிடிவி கேமராக்கள் கோவில்களுக்குள் பொருத்தப்பட்டன.
இந்நிலையில் அதனை தொடர்ந்து சிசிடிவி கேமரா வைத்த மறுநாள் கோவிலில் திருட்டு நடந்துள்ளது, மேலும் அந்த மர்ம நபர்கள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், அதை வைத்து, கெலமங்கலம் யார் யார் என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.