கனமழையால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஆறுகளில் வெள்ளம்!
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்ததால் இதுவரை இல்லாத அளவுக்கு நொய்யல் மற்றும் காலம்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு.
கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று மாலை 3 மணி முதல் கனமழை பெய்து வருவதால், குற்றாலம் நீர்வீழ்ச்சியில் மதியம் ஒரு மணிக்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அருகிலுள்ள நீர்வீழ்ச்சிகளில் மழை நீர் அதிகம் கொட்டியுள்ளது. மேலும் சின்னாறு பெரிய ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மாலை நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி உள்ளது.
இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் அதிக அளவில் ஆர்ப்பரித்து செல்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணை நீர்மட்டமும் 97 அடியாக அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 4 மதகுகள் திறந்துவிடப்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்து வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த ஆண்டு முதல் முறையாக பேரூர் நொய்யல் படித்துறைக்கு தண்ணீர் வந்துள்ளதால் மக்கள் மலர்தூவி வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.