பற்றி எரியும் காட்டுத் தீயால் கலிபோர்னியாவில் 20 ஆயிரம் ஏக்கர் எரிந்து நாசம்!

Default Image

கடந்த வெள்ளிக்கிழமை மாலை, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரிவர்சைட் கவுண்டி என்ற வனப்பகுதியில் திடீரென காட்டு தீ பற்றி எரிந்ததால் 20 ஆயிரம் ஏக்கர் எரிந்து நாசம்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வட பகுதியில் ரிவர்சைட் கவுண்டி  என்ற வனப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென காட்டு தீ ஏற்பட்டுள்ளது. ஒரு சில மணி நேரங்களில் மளமளவென பரவிய தீயால் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் தீ பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களை கொண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தாலும் தீ கொழுந்து விட்டு எரிந்து அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சி அளித்துள்ளது.

இந்த காட்டுத் தீக்கு ஆப்பிள் பயர் என பெயரிட்டுஉள்ளனர். அதிகாரிகள் 2500க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்த 8000க்கும் மேற்பட்ட பொது மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளனர். ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தியும் கட்டுக்கடங்காத இந்த தீயால், 20 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு தீ பரவியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்