டெல்லியில் உள்ள கொனாட் பிளேஸில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் வாடிக்கையாளர்கள் தென்னிந்திய உணவு வகைகளை அதிகமாக ஆர்டர் செய்து சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் அதுபோல ஒரு வாடிக்கையாளர் சாம்பார் உணவுக்காக வாங்கி உண்ட போது அதிலிருந்த பல்லியின் உடலை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டு அது வைரல் ஆகியுள்ளது. ஹோட்டல் மேலாளரும் அந்த சம்பவத்தை கண்டு ஓடி வருவதை அந்த வீடியோவில் காண முடிந்துள்ளது. இதனை அடுத்து அந்த வாடிக்கையாளர் உணவகம் மீது அளித்துள்ள புகாரின் பேரில் ஐபிசி 269 மற்றும் ஐபிசி 336 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அங்கு பயன்படுத்தப்படும் சமையல் பொருட்கள் பற்றிய விவரங்களை கேட்டறிந்து வருகின்றனர்.