அமித்ஷா விரைந்து குணமடைய முதல்வர் மற்றும் ராகுல் காந்தி ட்வீட்.!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இன்று கொரோனா உறுதி செய்யபட்டது. இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அமித்ஷா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைய பலர் வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைந்து குணமடைய வேண்டுகிறேன் என ராகுல் காந்தி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Wishing Mr Amit Shah a speedy recovery.
— Rahul Gandhi (@RahulGandhi) August 2, 2020
இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித்ஷா கொரோனா தொற்றில் இருந்து விரைந்து குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
Praying the almighty God for speedy recovery of Shri @AmitShah ji from his present illness.
Best wishes from TamilNadu for his good health.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 2, 2020