பூமியில் மனித இனம் எப்படி உருவானது…???
பூமியில் மனித இனம் உருவானதை விளக்குவதற்கு பல கொள்கைகள் இருக்கின்றன. அவற்றில் பிரபலமாக பொதுவாக பலரால் பேசப்படும் 4 கொள்கைகள் பற்றி பார்ப்போம்.
1. படைப்புக்கொளை.
இறைவனால் இந்த உலகில் மனிதர்கள் படைக்கப்பட்டார்கள் என குறிப்பிடும் கொள்கை இதுவாகும்.
இக்கொள்கை19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் வரை எவ்வித மாற்றுக்கருத்துமின்றி ஐரோப்பா மற்றும் மேற்கத்தைய நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கையாகும்.
குறித்த நாடுகள் உலகின் பல பகுதிகளை ஆக்கிரமித்திருந்தமையால் இக்கொள்கை உலகம் முழுவதும் பரப்பப்பட்டது.
கிறித்தவர்களின் அடிப்படையில், ஆதாம் ஏவால் எனும் இருவரை முதலில் இறைவன் படைத்ததாகவும் அதில் இருந்து தோன்றிய சந்ததிகளே நாங்கள் என கூறப்படுகிறது. இதை ஒத்த கதைகள் ஏனைய அனைத்து மதங்களிலும் காணப்படுகின்றன.
2. கூர்ப்புக்கொள்கை
கூர்ப்புக்கொள்கையானது டார்வின் எனும் விஞ்ஞானியிடம் இருந்து ஆரம்பமானது.
அதன் படி, ஒவ்வொரு உயிரினமும் முன்னைய உயிரினத்தில் இருந்து கால நிலைக்கு ஏற்ப கூர்ப்படைந்து / மாற்றமடைந்து உருவானதாக சான்றுகளுடன் நிறுவப்பட்டது.
அதனடிப்படையில் மனிதன், குரங்கில் இருந்து பிரிந்த ஒரு கிளை இனம் என நிறுவப்படுகிறது.
சமீபமாக, அதாவது 2013 ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற ஒரு அறிவியல் கருத்தரங்கில் சில விஞ்ஞானக்குழுக்கள் மனிதன் மீனில் இருந்து/ கடலில் இருந்து தோற்றம் பெற்றதாக கருத்து முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர்கள் குறிப்பிட்ட காரணங்களாக மனிதன் சிசிவாக இருக்கும் போது கைகளின் அமைப்பு, மனித மூளை வளர்ச்சிக்கு அதீதமாக தேவைப்படும் மீன் உணவுச்சத்து மற்றும் பிறந்த குழந்தை மூச்சை அடக்கி நீந்தும் திறன் என்பவை அடங்களாக கணிசமான அளவு சான்றுகளை சமர்ப்பித்திருந்தார்கள்.
3. வேற்றுக்கிரக இனக்கலப்பு
இக் கொள்கையின் படி, வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்த ஒரு இனமானது பூமியில் இருந்த குரங்கினத்துடன் கலவையில் ஈடுபட்டதன் விளைவாக தோன்றிய உயிரினமே மனிதர்கள் என கூறப்படுகிறது. இதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணங்களாக, பூமியில் மனித இனம் மட்டும் அதீத திறமைகளுடன் காணப்படுவது மற்றும் மரபணுவில் ஏற்பட்டிருக்கும் திடீர் மாற்றங்களை முன்வைக்கிறார்கள்.
4. வேற்றுக்கிரம பரீட்சார்த்தப்படைப்பு.
இதன்படி, மனித இனமானது பூமிக்கு சொந்தமில்லாத ஒரு இனம் எனவும், வேற்றுக்கிரகத்தில் இருந்து இங்கு வந்து குடியேறியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இதற்கு முன்வைக்கும் சில காரணங்ளில் பிரதானமாக அமைவது, மனிதனின் இடுப்பு பகுதியானது பூமியின் ஈர்ப்புக்கு ஏற்ப மைந்திருக்காமை மற்றும் ஏனைய் உயிரினங்களுடன் ஒப்பிடுகையில் மனித இனம் அதீத நோய்த்தாக்கல்களுக்கு உள்ளாவதை காரணம் காட்டுகிறார்கள்.
இப்பிரிவிலேயே இன்னோர் கருத்துப்படி; வேற்றுலகத்தில் இருக்கும் அதீத அறிவு வாய்ந்த ஒரு சமூகத்தினரால் உருவாக்கப்பட்டு விடப்பட்ட பரீட்சார்த்த ஒரு இனம் தான் மனித இனம் என கூறப்படுகிறது.