அக்டோபர் மாதத்திற்கு தயாராகும் கொரோனா தடுப்பூசி – ரஷ்யா திட்டம்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ரஷ்யா அக்டோபர் மாதத்திற்கான கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி வருகிறது.
அக்டோபர் மாதத்திற்கான கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசியை ரஷ்யா தயார் செய்து வருவதக தகவல் வெளியானது.
இந்நிலையில் ரஷ்யா சுகாதார அமைச்சர் Mikhail Murashko மாஸ்கோவில் உள்ள மாநில ஆராய்ச்சி “Gamaleya Institute” தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை முடித்துவிட்டதாகவும் அதை பதிவு செய்யும் வேலைகள் நடந்து வருவதாகவும் ‘Interfax’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாக்டர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதலில் தடுப்பூசி போடுப்படும் என்று அவர் கூறினார்.
“அக்டோபருக்கான தடுப்பூசிகளை உருவாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்,” என்று முராஷ்கோ கூறினார்.
ஜூன் மாதத்தில் ரஷ்யாவில் மருத்துவ பரிசோதனைகள் நாடு முழுவதும் அமைந்துள்ள ஏழு மருத்துவ சோதனை தளங்களில் தொடங்கியிருந்தன.
அறிக்கையின்படி, 2 வகையான தடுப்பூசிகள் சோதனையில் இருந்தன. ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளில் 38 பேர் கொண்ட இரண்டு பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர். பங்கேற்பாளர்கள் மாஸ்கோவில் இரண்டு தனி மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டனர் என்று தெரிக்கப்பட்டுள்ளது .
Gamaleya நிறுவனத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க், மனித சோதனைகளுக்கு முன்னர் ஆராய்ச்சியாளர்களுக்கு தடுப்பூசிகள் பரிசோதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ரஷ்யாவின் இந்த தடுப்பூசி ஆகஸ்ட் மாதத்தில் அந்நாட்டு முறைப்படி ஒப்புதலைப் பெறும் என்றும் விரைவில் சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, சீனா மற்றும் பிரிட்டன் உட்பட மேலும் இரண்டு நாடுகள் இறுதி கட்ட மனித சோதனைகளில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!
February 13, 2025![ICC Conduct](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ICC-Conduct.webp)
மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!
February 13, 2025![Kannadi Poove - Retro](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kannadi-Poove-Retro-.webp)
தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?
February 13, 2025![Vidaamuyarchi Ott Release](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Vidaamuyarchi-Ott-Release.webp)
“எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை” – அமைச்சர் ரகுபதி!
February 13, 2025![ragupathy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ragupathy.webp)
புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்!
February 13, 2025![Nirmala Sitharaman](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Nirmala-Sitharaman.webp)