தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!
19 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 19 மாவட்டங்களில் லேசான, மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
திருவள்ளூர், கோவை, தஞ்சை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு வாய்ப்பு உள்ளதால் அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.