6 மில்லியன் பார்வையாளர்களை அடித்து நொறுக்கிய தனுஷின் ‘ரகிட ரகிட’ பாடல்.!

தனுஷின் ஜகமே தந்திரம் படத்திலுள்ள ரகிட ரகிட பாடல் 6 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்த படத்தில் சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, வோக்ஸ்ஹால் ஜெர்மைன் மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்,ஜோஜு ஜார்ஜ் மற்றும் கலையரசன் ஆகியோர் துணை வேடங்களிலும் நடிக்கின்றனர்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு Y NOT ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
சமீபத்தில் அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக ஜகமே தந்திரம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ரகிட ரகிட பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த பாடல் 6 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. அதனை தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தற்போது ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.
6M for @Music_Santhosh’s #rakitarakita #jagamethandiram #suruli @StudiosYNot A @karthiksubbaraj padam https://t.co/pWEL8yuifa pic.twitter.com/ntvqe1fF0w
— Dhanush (@dhanushkraja) August 1, 2020