உறுப்பினர் சேர்க்கை படிவங்களை 10-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்- அதிமுக தலைமை உத்தரவு

Default Image

அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவங்களை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை  உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,அதிமுக சட்ட திட்ட விதிமுறைகளின்படி,கட்சியில் ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளவர்களின் பதிவை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்தலுக்கான நிறைவுப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.கட்சியில் ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்து பதிவை புதுப்பிக்காதவர்கள் மற்றும் விடுபட்ட உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பதற்காக,கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்ட செயலாளர்கள் ,தலைமையில் அடுத்து பெற்றுச் சென்ற உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து உரிய கட்டணத் தொகையுடன் ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் கட்சியின் தலைமையில் சேர்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.எக்காரணத்தை கொண்டும் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது.

ஆகவே மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கட்சியின் உடன்பிறப்புகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பினர் சேர்ப்பு பணியில் முழுமையாக ஈடுபட்டு உரிய காலத்திற்குள் இப்பணியினை செய்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.உறுப்பினர் உரிமை சீட்டுகளைப் பெற்றுள்ள கட்சி உடன்பிறப்புகள் மட்டுமே நடைபெற உள்ள கட்சி அமைப்புத் தேர்தலில் போட்டியிடுவதற்கும் , வாக்களிப்பதற்கும் தகுதி உடையவர் ஆவார்கள் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்