#BREAKING: தங்க கடத்தல் வழக்கு விசாரணை.. சென்னையிலும் அதிகாரிகள் முகாம்.?

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் 15 கோடி ருபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷூக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை கைது செய்து, கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இதைத்தொடர்ந்து, என்.ஐ.ஏ.எனப்படுகின்ற தேசிய புலனாய்வு ஏஜென்சி மற்றும் சுங்கத்துறை இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் ரகசிய விசாரணை நடத்துவதாக தகவல்வெளியாகி உள்ளது. டி.ஐ.ஜி. கல்பனா தலைமையில் சென்னையில் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், நேற்று காலையில் இருந்து 5 அதிகாரிகள் கொண்ட குழு சென்னையில் ரகசிய விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தல் தங்கம் தீவிரவாத செயலுக்கு பயன்படுத்தப்பட்டதா..? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025