புதிய கல்விக் கொள்கை பற்றி அரசு ஏனோதானோவென்று முடிவெடுக்க முடியாது – அமைச்சர் காமராஜ்
புதிய கல்விக் கொள்கை பற்றி அரசு ஏனோதானோவென்று முடிவெடுக்க முடியாது.
திருவாரூரில் கொரோனா வைரஸ் தடுப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த பின் அமைச்சர் காமராஜர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்,”மும்மொழிக் கொள்கை மத்திய அரசின் நிலைப்பாடாக உள்ள நிலையில் தமிழக அரசு இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளது” என அமைச்சர் காமராஜ் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், புதிய கல்விக் கொள்கை பற்றி அரசு ஏனோதானோவென்று முடிவெடுக்க முடியாது புதிய கல்விக்கொள்கையை ஆய்வு செய்த பின்னரே முடிவு அறிவிக்கப்படும் புதிய கல்விக்கொள்கையை குறித்து தமிழக அரசு உடனடியாக தெளிவற்ற முரண்பாடான முடிவுகள் எடுக்க முடியாது என்றும் அமைச்சர் காமராஜ்.